Home இந்தியா அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் – மோடி

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் – மோடி

by Jey

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:பொது மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கோவிட் வைரஸ் இன்னும் நம்முடன் தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடையவும் வாய்ப்பு உள்ளது. மக்கள் அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தடுப்பூசி போடும் போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி கையாளபட்டார்களோ அதேபோன்று, வரும் ஜூன் 21ம் தேதி முதல் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கையாளப்படுவார்கள்.

கோவிட் 2வது அலையில், வைரஸ் எனன மாதிரியான சவால்களை கொண்டு வந்துள்ளது என்பதை பார்த்துள்ளோம். இன்னும் கூடுதலான சவால்களை சந்திக்க நாடு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மனதில் வைத்துத்தான், நாடு முழுவதும் 1 லட்சம் கோவிட் முன்கள பணியாளர்களை தயார் செய்யும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சி 6 விதமான பணிகளுக்கு கோவிட் பணியாளர்களை தயார் செய்ய உதவும். வீட்டு சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்த படிப்பில் தனித்தனியாக கற்பிக்கப்படும். பாட திட்டத்தை நிபுணர்கள் வடிவமைத்து உள்ளனர்.

இது 2 அல்லது 3 மாதங்களில் நிறைவு பெறுவதுடன், கோவிட்டை எதிர்த்து போராட பயிற்சி அளிக்கப்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆக்சிஜன் தேவையை உறுதி செய்யும் வகையில் சுமார் 1,500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கும் பணி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

related posts