உலக டெஸ்ட் ச்சம்பியனின் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்றைய தினம் கைவிடப்பட்டது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சவுத்ஹெம்ப்டனில் மோதவுள்ளன. இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைத்தாங்கவுள்ளனர்.
பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சவுத்ஹெம்ப்டனில் பெய்த மழை காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை நடாத்த முடியவில்லை.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலுக்கமைய முதல் இரு இடங்களிலுள்ள அணிகள் இறுதிப்போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய பட்டியலில் முதல் இடத்திலிருக்கும் இந்தியா அணி 17 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 520 புள்ளிகளை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 420 புள்ளிகளை பெற்று 2ம் அடத்திலுள்ளது.