Home கனடா கனேடிய – அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

கனேடிய – அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

by Jey

கனேடிய அமெரிக்க எல்லைப் பகுதி தொடாந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு எல்லைப் பகுதி மூடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் எதிர்வரும ஜூலை மாதம் 21ம் திகதி வரையில் அமெரிக்க – கனேடிய எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் இந்தவ pடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணங்களை மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த எல்லைப் பகுதி கட்டுப்பாடு அமுலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

related posts