‘டில்லியில் மக்கள் பொதுவெளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடக்கின்றனர்; இது, மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும்’ என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டில்லியில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதனால் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில், மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.சமூக இடைவெளியை பின்பற்றாமல், மக்கள் கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது, டில்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.’கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால், அது, மூன்றாம் அலையை துரிதப்படுத்தும்’ என, டில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
தற்போது நிலவும் சூழல் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் உயர் நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பியது.பொதுவெளிகளில் விதிகளை மீறி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.