Home இந்தியா சிங்கங்களையும் விட்டுக் வைக்காத கொரோனா

சிங்கங்களையும் விட்டுக் வைக்காத கொரோனா

by Jey

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. மனிதர்களையே அதிகமாக தாக்கும் கொரோனா வைரஸ் அவ்வப்போது சில விலங்குகளையும் தாக்கிவரும் செய்திகளை ஆங்காங்கே கேட்டிருப்போம். பல நாடுகளில் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் வைரஸ் தாக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை இந்தியாவிலும் தொடர்கிறது.

உயிரியல் பூங்காக்கள் மற்றும் இயற்கை வனவிலங்கு சரணாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்கள் மூலமாக சிங்கங்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. விலங்குகளின் ஜீன்கள் மனிதர்களில் இருந்து மாறுபடும். ஆனால் மனிதர்களிடமிருந்து சிங்கங்களுக்கு எவ்வாறு கொரோனா வைரஸ் பரவுகிறது என்று தற்போது உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இதற்கான காரணம், தீர்வு, விலங்குகளுக்கான தடுப்பு மருந்து ஆகிய அனைத்துமே தற்போது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. நிலைமை இவ்வாறு இருக்க பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியதை அடுத்து இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் சோதனை மேற்கொண்டனர். பி 1.6.1.7.2 ரக வைரஸ் பதினோரு சிங்கங்களைத் தாக்கியுள்ளது. இதுகுறித்து போபால் விலங்கு நல அமைப்பு சோதனை நடத்தியது.

பாதிக்கப்பட்ட சிங்கங்களில் ஒன்பது சிங்கங்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்பது வயதான பெண் சிங்கம் நீலா மற்றும் 12 வயதான ஆண் சிங்கம் பத்மநாபன் ஆகிய இரு சிங்கங்களும் இந்த மாதம் வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

related posts