எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் சகல கனேடியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற முடியும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இரண்டு மாத்திரைகளையும் அனைவருக்கும் வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்கு போதுமானளவு கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளக்கூடிய தகுதியுடைய அனைத்து கனேடியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் கனடாவிற்கு மொத்தமாக 68 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் எனவும், இது நாட்டின் தகுதியுடைய மொத்த சனத்தொகைக்கு முழுவதுமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 12 மில்லியன் மக்கள் முதல் மாத்திரையை பெற்றுக்கொள்ள நான்கு மாதங்கள் கடந்த போதிலும் இரண்டாவது மாத்திரையை பெற்றுக்கொள்ள 43 நாட்களே கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.