Home கனடா டெல்டா திரிபு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்

டெல்டா திரிபு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்

by Jey

கனடாவில் டெல்டா திரிபு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைய நாட்களாக கனடாவில் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், டெல்டா திரிபானது இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடும் என்பதனை அனைவரும் நினைவில நிறுத்திக் கொள்ள வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் கனடா முழுவதிலும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1016 காணப்பட்டது.

கொவிட் வைத்தியசாலை அனுமதிகளும் பாரியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் டெல்டா தொற்றினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts