ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈரான் உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருந்து வரும் இப்ராஹிம் ரைசி, அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உச்சபட்சமான 4 ஆண்டுகளுடன் கூடிய
தொடர்ச்சியான இரு பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (18) நடந்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.