Home கனடா கனடாவில் 20 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது

கனடாவில் 20 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது

by Jey

கனடாவில் 20 வீதமானவர்களுக்கு முழுமையான அளவில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு தகுதியுடையவர்களில் 20 வீதமானவர்களுக்கு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.

12 வயதுக்கும் மேற்பட்ட வயதுகளை உடைய தடுப்பூசி ஏற்றிக் கொள்ள தகுதியுடையவர்கள் இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்.

மேலும், 75 வீதமான கனேடியர்கள் குறைந்தபட்சம் ஒரு மாத்திரை தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வரும் நிலையில் மாகாணங்கள் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதுடன் சில மாகாணங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

related posts