கொவிட்19 பெருந்தொற்று பழங்குடியின மக்களை மோசமாக தாக்குவதாக நிபுணாகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 1ம் திகதி வரையிலான புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் பழங்குடியின மக்களுக்கு நோய்த் தொற்று காவும் வீதம் 188 வீதமாக காணப்படுகி;ன்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று நோய்த் தொற்றினால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் பழங்குயின மக்களை அதிகம் பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழங்குடியின மக்களை அதிகளவில் கொவிட் தொற்று தாக்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடிப்படைவசதிகளின்மை, அதிக சனநெரிசல் மற்றும் நீர் வசதியின்மை போன்ற காரணிகளினால் இவ்வாறு நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக காணப்படுகின்றது என வீனிபாய்கோ பிராந்தியத்தின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் லைன் இன்னிஸ் தெரிவித்துள்ளார்.