நோவா ஸ்கோட்டியாவில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக முதல் தடவையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இருநூறு ஆண்டுகளாக இந்த சங்கம் இயங்கி வந்தாலும் முதல் தடவையாகவே இவ்வாறு தலைவர் பதவிக்கு பழங்குடியினத்தவர் ஒருவர் தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்காசொனி பழங்குடியினத்தைச் சேர்ந்த டுமா யங் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த சட்டத்தரணியே இவ்வாறு தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளார்.
பல்வகையினத்தவர்களும் இவ்வாறான பதவிகளில் அமர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது என யங் தெரிவித்துள்ளார்.