Home உலகம் பிரேசிலில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர்வு

பிரேசிலில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர்வு

by Jey

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 2 ஆயிரத்து 247 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 868 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, உலகளாவிய ரீதியில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரச் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியினை தவிர்த்தல் உள்ளிட்ட விதிமுறைகளை பொது மக்கள் மீறி செயற்படுவதன் காரணமாகவே இவ்வாறு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேசிலின் சனத்தொகையில் 15 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக பிரேசிலின் எதிர்க்கட்சி குற்றஞ் சாட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

related posts