Home இலங்கை ஜூலை 5ம் திகதி வரையிலான சுகாதார வழிகாட்டல்கள்

ஜூலை 5ம் திகதி வரையிலான சுகாதார வழிகாட்டல்கள்

by Jey

ஜூலை 5 ஆம் திகதி வரை பின்வரும் வழிகாட்டல்கள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றிலிருந்து இருவர் மாத்திரமே வௌியே செல்ல முடியும்.
வாடகை வாகனங்களில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயணிப்பதற்காக மாத்திரம் மேல் மாகாணத்தில் பொதுப்போக்குவரத்து முன்னெடுக்கப்படும்.
ஏனைய மாகாணங்களில், இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 வீதமானோர் மாத்திரமே பொதுப்போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த முடியும்.
அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத ஏனைய அமைச்சுகள், நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர் வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே கடமைக்கு அழைக்கப்பட வேண்டும். வீட்டிலிருந்து தமது கடமையை முன்னெடுக்க முடியாதவர்களையே அவ்வாறு அழைக்க முடியும். அவ்வாறு அழைக்கப்படும் ஊழியர்களுக்கு, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
தனியார் பிரிவுகளும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் நடத்திச் செல்லப்பட வேண்டும்.
ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்துறைகளின் நடவடிக்கைகள், விசேட பாதுகாப்பு குமிழ் முறைமைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்.
வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில், ஒரே சந்தர்ப்பத்தில் 10 பேர் மாத்திரமே கொடுக்கல் வாங்கலுக்காக பிரவேசிக்க முடியும்.
திருமண நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றுதலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.
மரணச் சடங்குகளை சடலம் ஒப்படைக்கப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் 15 பேரின் பங்குபற்றுதலுடன் நடத்த வேண்டும்.
சில்லறைக் கடைகள், ஆடை வர்த்தக நிலையங்களில் ஒரே சந்தர்ப்பத்தில் மூவர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும்.
பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் 25 வீதமானோர் மாத்திரமே உட்செல்ல வேண்டும்.
சிகை அலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களில் ஒரே சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரமே இருக்க வேண்டும்.

related posts