சஸ்கட்ச்வானில் அனைத்து விதமான கொவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி அனைத்து வகையான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாகாணத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட 70 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 வயதுக்கும் மேற்பட்ட மாகாண சனத்தொகையின் 70 வீதமானவர்களுக்கு ஒரு மாத்திரை கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு மூன்று வாரங்களின் பின்னர் முகக் கவசம், சமூக ஒன்றுகூடல் உள்ளிட்ட சுகாதார கெடுபிடிகள் தளர்த்தப்படுமு; என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் இந்த இலக்கினை எட்ட முடியும் என மாகாண முதல்வர் ஸ்கோட் மோய் தெரிவித்துள்ளார்.