உள்ளுர் சந்தையில் அரிசியின் விலையை நிலையாக பேணும் நோக்கில் அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. உள்ளுர் சந்தையில் அதிகரித்துள்ள அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.