மனிடோவ்லின் தீவுளில் கனேடிய தின நிகழ்வுகள் கொண்டாட வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினத் தலைவர்களினால் இந்தகு; கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க தேவாலயங்களினால் பராமரிக்கப்பட்ட வதிவிட பாடசாலைகளில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி கனடாவில் கனேடிய தின நிகழ்வுகள் கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கனேடிய தின நிகழ்வுகளை கொண்டாடுவதனை தவிர்த்து, குறித்த நாளில் வதிவிட பாடசாலைகளில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மானிடோவ்லினின் பழங்குடியினத் தலைவர்களினால் அந்த தீவு மக்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.