Home உலகம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

by Jey

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சிறுவர்களுக்கு எதிரான பாதிப்புக்கள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய அறிக்கைகளினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களை கடத்தி செல்லுதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் தொழிலாளர்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு யுத்த மற்றும் வன்முறை சம்பவங்களினாலும் 19 ஆயிரத்து 379 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரத்து 400 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் மாத்திரம் குறித்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் கொங்கோ இராச்சியம், சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளில் கூடுதலான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆயிரம் பேர் சிறுவர் போராளிகளாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் யுத்த நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வருடாந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களை கடத்திச்செல்லும் சம்பவங்கள் 90 வீதத்தாலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் 70 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் மேலும் தெரியவந்துள்ளது.

related posts