Home கனடா பழங்குடியின மக்கள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது

பழங்குடியின மக்கள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது

by Jey

பழங்குடியின மக்கள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கும் லிபரல் அரசாங்கம், முக்கியமான சில விசாரணைகளில் மெத்தனப் போக்கில் செயற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பழங்குடியினத்தவர் தினத்தில் அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கிய போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பழங்குயின மக்களுடான நல்லிணக்க முனைப்புக்களின் அடைவுகளை பிரச்சாரம் செய்யாது உண்மையில் அந்த மக்கள் சமூகத்திற்கு அரசாங்கத்தின் சேவைகளை பட்டியலிட வேண்டுமென கோரியுள்ளார்.

காம்லூப்ஸ் வதிவிட பாடசாலையில் 215 சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்க ஏதுவாகியுள்ளது.

காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தியில்லை என பழங்குடியின தலைவைர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts