Home உலகம் வறிய நாடுகளுக்காக தடுப்பூசி உற்பத்தி செய்யும் தென்னாபிரிக்கா

வறிய நாடுகளுக்காக தடுப்பூசி உற்பத்தி செய்யும் தென்னாபிரிக்கா

by Jey

தென்னாபிரிக்காவில் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மையமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி உற்பத்தி மையத்தினூடாக ஆப்பிரிக்க வலயம் புதிய சுயாமாக பாதையில் பயணிக்கும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஊடாக புதிய கொரோனா தடுப்பூசி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதனூடாக ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான உரிமங்கள் மற்றும் துறைசார் அறிவை பெற்றுக்கொடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உயிர்களை பாதுகாப்பதற்கான தொழினுட்பமாக அமையும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தொழினுட்ப பரிமாற்ற மையத்தின் ஊடாக ஆபிரிக்க நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் மேம்படும் எனவும் தற்போது பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழினுட்பத்தை பயன்படுத்தவும் சந்தர்ப்பம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்கா முழுவதும் தடுப்பூசி விநியோக செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் எட்னமினால் அதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

related posts