தமிழக சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா., உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் 16வது சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) துவங்கியது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய சட்டசபை கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள அரசின் செயல்திட்டங்கள் குறித்து பல்வேறு அம்சங்களுடன் உரையாற்றினார். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, முக்கிய நபர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா., சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன், அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ.,க்கள் அனைவரும் எழுந்துநின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.