ஆப்கானிஸ்தானின் சில மாவட்டங்களில் தங்கியிருந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு இராணுவத்தினரை வெளியேற்றும் சந்தர்ப்பத்தில் தாக்குதல்கள் நடத்தப்படலாமென ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு என்பன எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ம் திகதிக்குள் ஆப்கானிஸ்தானிலுள்ள இராணுவத்தினரை முழுமையாக அங்கிருந்து வெளியேற்ற எதிர்பார்த்துள்ளன. ஆப்கானிஸ்தானின் சில மாவட்டங்கள் தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ளன. இந்நிலை மேலும் மோசமடையக்கூடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.