Home இலங்கை ரிஷாத்தின் கைது சட்டவிரோதமானது

ரிஷாத்தின் கைது சட்டவிரோதமானது

by Jey

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சபையில் கதைப்பதற்கு தான் கடமைப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஒரு கட்சியின் தலைவர். சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இந்த பாராளுமன்றில் இருக்கிறார்.

வரலாற்றில் முதலாவதாக தடுப்புக் காவலின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இவர் தான். இதற்கு முன்னர் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் இவ்வாறு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கவில்லை.

இவர் பிணை கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். ஒவ்வொரு தடவையும் வழக்கு விசாரணைக்கு வரும் போது ஒவ்வொரு நீதியரசரும் விலகுகிறார்கள் .

முதலில் மே மாத 28, இரண்டாவதாக ஜூன் 4ம் திகதி விலகினார்.

இந்நாள் பொலிஸ்மா அதிபர் பாராளுமன்ற செயற்குழுவுக்கு கடிதம் ஒன்றினை வழங்கி அதில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் முழுமையாக நிரபாராதி அவர் சிறிதளவேனும் இதனுடன் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மூன்று முறை பிணை கோரியும் மூன்று முறையும் நீதியரசர்கள் விலகுகிறார்கள். இது என்ன கேளிக்கை எனக் கோருகிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.

related posts