ஒன்றாரியோ மாகாணத்தில் பொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் 300க்கும் குறைந்த நோய்த் தொற்றாளர்கள் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தின் கொவிட் தொற்றாளர் சராசரி எண்ணிக்கையானது 316 ஆக காணப்படுவதாகவும் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த சராசரி எண்ணிக்கை 475 ஆக காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 9093 ஆக பதிவாகியுள்ளது.
மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர் தொடாபில் அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாணம் தெரிவித்துள்ளது.