அமெரிக்கா, ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத்தடைகளை விதிக்கவுள்ளது. ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டமை மற்றும் சிறைவைக்கப்பட்டமை தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விரைவில் பொருளாதாரத்தடைகள் தொடர்பில் அறிவிப்பு வெளியாகுமென அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இரசாயன ஆயுதங்கள் தொடர்பிலும் பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏற்கனவே சைபர் தாக்குதல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.