றொரன்டோவில் கூடாரங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ட்ரினிட்டி பெல்வுட்ஸ் பார்க்கில் சட்டவிரோதமான முறையில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலவந்தமான அடிப்படையில் இந்த நபர்கள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட போது சிலர் பொலிஸாருடன் முரண்பட்டதாகவும் அவ்வாறனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.