முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறப்படாத நிலை நீடித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்ட ரீதியான முறையிலா துமிந்த விடுதலை செய்யப்பட்டார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதிக்கு உண்டான நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கினாலும் சில நியதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளது.
குறிப்பாக சட்ட மா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
துமிந்த விடுதலை செய்யப்பட்டமைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.