Home உலகம் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை ஆபத்தானது – யுக்ரேன்

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை ஆபத்தானது – யுக்ரேன்

by Jey

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய நிலையில், யுக்ரேன் இதனை தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தை, கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்ததை அடுத்து குறித்த பிராந்தியம் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கு இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts