வதிவிடப்பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி கண்டறிவதற்கு நிதியமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாணம் இவ்வாறு எட்டு மில்லியன் டொலர் பெறுமதியான நிதியமொன்றை உருவாக்கியுள்ளது.
மாகாணம் முழுவதிலும் வதிவிடப் பாடசாலைகளில் சிறார்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது நல்லிணக்கத்திற்கான அல்பர்ட்டா பிரஜைகளின் நாட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலானது மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இந்த நிதியத்தின் ஊடாக நிதி வழங்கப்பட உள்ளது.
அதிகபட்சமாக 150,000 டொலர்கள் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் கென்னி தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் பழங்குடியின மக்களுக்கு பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.