இணையம் ஊடான குரோதப் பேச்சுக்களை தடுப்பதற்கு புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனேடிய குற்றவியல் சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இனம், தேசியம், மொழி, நிறம், மதம், பால்நிலை, உடல், உள சுகாதார நிலை போன்றவற்றின் அடிப்படையிலான வெறுப்பு அல்லது குரோதப் பேச்சுக்களை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இணையத்தில் குரோதப் பேச்சுக்களை மேற்கொள்ளும் நபர்களை சட்ட ரீதியாக தண்டிக்கக்கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
திட்டமிட்ட அடிப்படையில் குரோதப் பேச்சுக்களை மேற்கொள்வோரை அடையாளம் கண்டு அவர்களை தண்டிக்கும் நோக்கில் குரோதப் பேச்சு என்பது குறித்து வரைவிலக்கணம் செய்துள்ளதாக நீதி அமைச்சர் டேவிட் லாமெட்டி தெரிவித்துள்ளார்.