Home கனடா சஸ்கட்ச்வான் புதைகுழிகள் தொடர்பில் பிரதமர் மன்னிப்பு கோரினார்

சஸ்கட்ச்வான் புதைகுழிகள் தொடர்பில் பிரதமர் மன்னிப்பு கோரினார்

by Jey

சஸ்கட்ச்வான் புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே மன்னிப்பு கோரியுள்ளார்.

சஸ்கட்ச்வான் மாடிவெல் இந்திய வதிவிடப் பாடசாலை வளாகத்தில் சுமார் 750 கல்லறை கற்கள் அற்ற புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கவ்சீஸ் மற்றும் ட்ரீட்டி போர் பழங்குடியின சமூகத்தினரிடம் விசேடமாக மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்றதை தடுக்க முடியாது என்ற போதிலும் தற்போது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய தரப்புக்களும் பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கனடா எவ்வாறு செயற்பட்டுள்ளது என்பது குறித்து கனேடியர்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

related posts