இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என எதிர்ப்பார்க்கின்றோம். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.ஜூலை மாதத்தில் 4 மில்லியன் சைனோ பாம் தடுப்பூசிகளும், 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன.
அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோ பாம் தடுப்பூசிகளும், 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன.
இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோ பாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.” – என்றார்.