Home இலங்கை கடல் உயிரினங்களுக்கு நஞ்சு ஊட்டிய அரசாங்கமே இது – வேலு குமார்

கடல் உயிரினங்களுக்கு நஞ்சு ஊட்டிய அரசாங்கமே இது – வேலு குமார்

by Jey

” கடல்வாழ் உயிரினங்களுக்குகூட நஞ்சூட்டி, இரசாயன தாக்குதல் நடத்தும் அரசாங்கமே நாட்டை ஆள்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை கடற்பரப்பில் கொள்கலன் கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தையடுத்து, நாளாந்தம் ஆமைகள், டொல்பின்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குகின்றன. அவற்றின் உடல்களின் எரிகாயங்கள் தென்படுகின்றன. ஆக கடல்வாழ் உயிரினங்களுக்கு நஞ்சை ஊட்டிய, எசிட் வீசிய அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் திகழ்கின்றது. இந்நாட்டிலுள்ள கடற்றொழில் அமைச்சரும், சுற்றாடல் அமைச்சரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரையொதுங்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், இவை தொடர்பில் ஆய்வு செய்து, மக்களுக்கு உண்மை நிலைவரத்தை சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அரசாங்கமும் தெளிவுபடுத்தாமல் உள்ளது. இந்த விடயத்தையும் மூடிமறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. ” – என்றார்.

related posts