கொவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே அதிகளவில் நோய்த் தொற்றினால் மரணிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்19 நோய்த் தொற்று தாக்கம் மற்றும் மரணம் என்பன தடுப்பூசி ஏற்றப்படாதவர்களின் மத்தியில் வெகுவாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொடர்பிலான புள்ளிவிபரவியல் தகவல்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள்ளது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 2700 பேருக்கு இதுவரையில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இது வெறும் 0.5 வீதமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாத்திரைகளையும் போட்டுக் கொண்ட 66 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
பகுதியளவில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கூட நோய்த் தொற்று தாக்கம் வெகுவாக குறைவாக்க் காணப்படுவதாகவும், தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களே அதிகளவில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.