Home இலங்கை புதிய கொத்தணிகள் உருவாகும் அபாயம்?

புதிய கொத்தணிகள் உருவாகும் அபாயம்?

by Jey

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும், புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இன்னும் குறையவே இல்லை – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தவந்த நிலையில் நேற்று 2ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு அடுத்துவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையக்கூடும் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது.

புதிய கொத்தணிகள் உருவாவதற்கான அபாயம் முன்னர் இருந்ததுபோலவே தற்போதும் இருக்கின்றது. குறிப்பாக வர்த்தக நிலையம், பொதுபோக்குவரத்து ஊடாக தொற்று பரவக்கூடும். எனவே, தமக்கான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், பொதுநலன் கருதியும் மக்கள் செயற்படவேண்டும்.

கொரோனா என்பது பொது எதிரி. அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைக்கு பெருந்தொகை செலவாகின்றது. போர் காலத்தில் செலவிடுவதுபோல் பெருந்தொகை இதற்காக செலவிடப்படுகின்றது. எனவே, கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – என்றார்

related posts