சஸ்கட்ச்வான் வதிவிடப்பாடசாலை விவகாரம் தொடர்பில் உதவத் தயார் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சஸ்கட்ச்வான் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் சுமார் 751 கல்லறை கற்கள் இல்லாத புதைகுழிகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த புதைகுழிகள் பற்றிய விபரங்கள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கவ்ஸீஸ் பழங்குடியின சமூகம் விசாரணை கோரினால் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பழங்குடியின சிறார்கள் கல்வி கற்ற வதிவிடப் பாடசாலைகளில் இவ்வாறான புதைகுழிகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.