அமெரிக்காவின் மியாமியில் இடம்பெற்ற கட்டிட விபத்தில் நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்தபட்சம் நான்கு கனேடிய பிரஜைகள் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என சர்வதேச விவகார திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு பேணி வருவதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சிக்கிய 160 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் இதுவரையில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.