வதிவிடப் பாடசாலைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட றொரன்டோ மதகுரு ஒருவர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.
Owen Keenan என்ற றோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் மதகுருவே இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டிருந்தார்.
வதிவிடப் பாடசாலைகளில் றோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் நன்மை செய்திருப்பதாக அவர் ஆராதணை ஒன்றின் போது தெரிவித்திருந்தார்.
வதிவிடப் பாடசாலைகளில் இனச்சுத்திகரிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் நபர்கள் தேவாலயங்களினால் முன்னெடுக்கப்பட்ட நன்மைகளைப் பற்றி பேசுவதில்லை என அந்த மதகுரு விமர்சனம் செய்திருந்தார்.
நாடு முழுவதிலும் வதிவிடப்பாடசாலை சிறார்கள் கொல்லப்பட்ட விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.