Home இந்தியா விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவர்

விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவர்

by Jey

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி போடும் நகழ்ச்சியை துவக்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டிற்கு பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள். விளையாட்டு துறையை விளையாட்டாக எடுத்து கொண்டால், விளையாட்டாக போய் விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான், விளையாட்டு துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டிகள் குறித்து குழந்தை பருவத்திலேயே ஊக்குவிக்க வேண்டும். நானும் பள்ளி பருவத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வீரர்களுக்கு என்ன தேவை என்ன என்பது எனக்கு தெரியும். வீரர்களின் தேவை நிறைவேற்றப்படும். உலக அளவில், இந்தியாவிற்கு பெருமை சேர்க்க தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சாதனை படைக்க வேண்டும்.

ஜப்பானில் ஒலிம்பிக் தமிழகத்தில் 7 பேர் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில், 4 ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்தது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சர்வதேச போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். உங்கள் நலன் பேணி காக்கப்படும். உங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்

related posts