பிரிட்டிஷ் கொலம்பியாவில் மேலும் இரண்டு தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் காலை இவ்வாறு இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
லோவர் சிமில்காமீனில் அமைந்துள்ள சோப்பாக்கா தேவாலயமும், அப்பர் சிமில்காமீனில் அமைந்துள்ள புனித ஆன்ஸ் தேவாலயமும் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளன.
பழங்குடியின மக்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட சம்பங்களுடன் கத்தோலிக்க தேவாலங்களுக்கும் பங்கு உண்டு என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு தேவாலயங்கள் சில எரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வதிவிடப்பாடசாலைகளில் சிறார்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களுடன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.