சஸ்கட்ச்வான் வதிவிடப்பாடசாலை புதைகுழிகள் தொடர்பில் விழிப்புணர்வு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சஸ்கட்ச்வானில் வதிவிடப் பாடசாலையொன்றின் வளாகத்தில் 751 அடையாளப்படுத்தப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இந்த புதைகுழிகள் அனைத்திலும் கல்லறைக் கற்கள் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த துயர்மிகு சம்பவத்தை நினைவு கூர்ந்து மக்களை விழிப்புணர்வடையச் செய்யும் நோக்கிலான நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
வதிவிடப்பாடசாலைகளில் கல்வி கற்று உயிரோடு இருப்பவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.
உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் சுமார் 751 விளக்குகள் ஒளிரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பழங்குடியினத் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வதிவிடப் பாடசாலை புதைகுழிகள் தொடர்பில் விழிப்புணர்வு போராட்டம்