கனேடிய வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைடோனில் இவ்வாறு அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
லைடோனில் 46.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவியதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த கனேடிய வரலாற்றில் பதிவான அதி கூடிய வெப்பநிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
1937ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் திகதி சஸ்கட்ச்வானில் பதிவான வெப்பநிலையே இதுவரையில் கனடாவில் பதிவான அதிகூடிய வெப்பநிலையாக 45 பாகை செல்சியஸ் காணப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைடோனில் பதிவான அதி கூடிய வெப்பநிலை மேலும் உயர்வடையக் கூடும் என சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.