பழங்குடியின குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பழங்குடியின நலன்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்ளினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வதிவிடப் பாடசாலைகளில் சிறார்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டதனைப் போன்ற நிலைமை இன்றளவிலும் வேறும் விதமாக அரங்கேறுகின்றது என பழங்குடியின சிறுவர் மற்றும் குடும்ப பராமரிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சின்டி பிளக்ஸ்டோக் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பழங்குடியின சிறார்கள் இன்றளவிலும் பராமரிப்பு நிலையங்களில் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் சிறார்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
றோமன் கத்தோலிக்க வதிவிடப் பாடசாலைகளில் சிறார்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வெளியிடப்பட்டுள்ளது.