புதிய உருமாற்றமான டெல்டா வைரஸ் தொற்றிய பலர் அவுஸ்திரேலியாவின்ன பல மாநிலங்களிலிருந்தும் இனங்காணப்பட்டதாக அந்நாட்டு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
சிட்னி நகரில் மாத்திரம் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றிய 110 பேர் அளவில் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லெண்ட் மாநிலம் உட்பட மேலும் ஒரு சில மாநிலங்களிலிருந்து டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஒரே தடவையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஒரு சில மாதங்களுக்கு பின்னரே இவ்வாறு இனங்காணப்பட்டனர்.
இவ் வைரஸ் வேகமாக பரவுவதனால் சிட்னி நகரை இரண்டு வார காலத்திற்கு முடக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.