Home இந்தியா Agni Prime ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்தது இந்தியா

Agni Prime ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்தது இந்தியா

by Jey

அணுவல்லமை கொண்ட Agni Prime கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரீட்சித்துள்ளது.

அக்னி வகையைச் சேர்ந்தவற்றில், மேம்படுத்தப்பட்ட புதிய திறனுடையதாக இந்த ஏவுகணை காணப்படுகின்றது.

ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வருக்குக் கிழக்கே 150 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள APJ Abdul Kalam தீவிலுள்ள பரீட்சார்த்த தளத்திலிருந்து இன்று (28) காலை 10.55 மணிக்கு குறித்த ஏவுகணையின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமாக இந்திய பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி அமைப்பு அறிக்கை ஒன்றினூடாகத் தெரிவித்தது.

இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் உள்ள ஏராளமான பரிவர்த்தனை மற்றும் ரேடர் நிலையங்கள் விண்ணில் செலுத்தப்பட்ட ஏவுகணையைக் கண்காணித்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

related posts