Home கனடா எத்தியோப்பியாவிற்கு நிவாரண்ஙகள் வழங்கப்படக் கூடாது என கோரிக்கை

எத்தியோப்பியாவிற்கு நிவாரண்ஙகள் வழங்கப்படக் கூடாது என கோரிக்கை

by Jey

எத்தியோப்பியாவிற்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய அரசாங்கம் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை எத்தியோப்பியாவிற்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவிற்கு உதவிகள் வழங்கப்படக் கூடாது எனவும், டிக்ரேய் பிராந்திய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் டிக்ரேய் சமூக அமைப்பினைச் சேர்ந்த அஸெப் கப்ரிவொட் இதனைக் கோரியுள்ளார்.

கனேடிய வரிச்செலுத்தும் மக்களின் பணம் எத்தியோப்பியாவிற்கு வழங்கப்படுவதாகவும் இந்தப் பணம் டிக்ரே மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்த பயன்படுத்தப்படுகின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

டிக்ரேயில் இடம்பெற்று வரும் வன்முறைகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வரும் நிலையில் எத்தியோப்பியாவிற்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தமது சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts