Home கனடா துப்பாக்கிக் கொள்வனவு பாரிய செலவினை ஏற்படுத்தும்

துப்பாக்கிக் கொள்வனவு பாரிய செலவினை ஏற்படுத்தும்

by Jey

துப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் திட்டம் பாரியளவு செலவினை ஏற்படுத்தும் என வரவு செலவுத் திட்ட அதிகாரி  Yves Giroux தெரிவித்துள்ளார்.

பொது மக்களிடம் காணப்படும் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு பாரியளவுpல் பணம் தேவைப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அதிகாரியினால் இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை மக்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக 756 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு தடை செய்யப்பட்ட சுமார் 518000 துப்பாக்கிகள் இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

related posts