ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் எவ்வித ‘டீலும்’ கிடையாது – என்று மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையின் பின்னணியில் மொட்டு கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச இருக்கின்றார் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ‘டீல்’ அரசியல் நடத்தும் கட்சி கிடையாது.மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கட்சி கட்டமைப்பாகும். நாட்டிலுள்ள பலமான, அதிக அங்கத்தவர்களைக்கொண்ட கட்சி எமது கட்சியாகும்.
எனவே, எவருடனும் ‘டீல்’போட வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு கிடடாது. ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வருகையால் குழப்பிபோயுள்ளவர்களே இவ்வாறான தகவல்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நாம் ‘டீல்’ போடமாட்டோம். மக்களுடன் மட்டுமே எமக்கான ‘டீல்’ உள்ளது.” – என்றார்.