குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் (National Commission For Protection of Child Rights) அளித்த புகாரின் பேரில், டிவிட்டர் மீது டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
டெல்லி போலீஸ் சைபர் செல் ட்விட்டருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ட்விட்டர் (Twitter) அண்மைக் காலமாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதற்காக நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 505 (2) மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஐடி (திருத்த) சட்டம் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த குறைதீர்ப்பு அதிகாரி (grievance officer) தர்மேந்திரா சதுர் தனது வேலையை ஒரே வாரத்தில், ராஜினாமா செய்துவிட்டார். இதனால், ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.