நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவுக்கு 15 மாத சிறைத்தண்டனை தென்னாபிரிக்க உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
79 வயதான தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா இந்த வருட ஆரம்பத்தில் ஊழல் விசாரணையில் ஆஜராக நீதிமன்ற உத்தரவை மீறியமை காரணமாகவே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேக்கப் ஜுமா 2009 முதல் 2018 வரை தனது ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் துணை தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்துடன் ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஜேக்கப் ஜுமா மறுத்ததாக அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் முதல்முறையாக, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.