பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பரியளவு வெப்பநிலை பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைட்டோனில் கடந்த மூன்று நாட்களாக அதி கூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக 46.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்ததுடன் இது திங்கட்கிழமை 47.9 பாகை செல்வியஸாக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் லைட்டோனில் 49.5 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளது.
கனேடிய வரலாற்றில் பதிவான அதி கூடிய வெப்பநிலையாக இந்த வெப்ப நிலை காணப்படுகின்றது.